verse 26 · Kulathur Amuthambikai Pillaitamil · Sivagnana Swamigal

குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 26 · தாலப் பருவம்

சுரும்பர் துளைக்க வுவட்டெடுத்துச் சொரியு மிரதச் செழுங்கரும்பைச் -சுவைத்துக் கதலிக் குலைசாடித் தூங்குந் தெங்கம் பழஞ்சிதறி,விரிந்த பசுநெட் டிலைக்கமுகின் மேவிக் ககனத் தருவையதன் -மீது படர்பூங் கொடிவழிபோய்மிதித்துக் குனித்து விளையாடி,வரிந்த கழையி னெடுக்கயிற்று வழிபோய் நடிக்கும் பொருநர்திற -மானக் குரக்குக்குலங்குதிக்கும் வளஞ்சேர் பொதும்பர் சூழ்குளத்தூர்,பரிந்து தொழுவோர் மனத்துநறும் பாகே தாலோ தாலேலோ-பணில முயிர்த்த தரளநகைப் பாவாய் தாலோ தாலேலோ.
Share

பொருள்

சுரும்பர் துளைக்க உவட்டு எடுத்துச் சொரியும் இரதச் செழுங்கரும்பைச் சுவைத்துக் கதலிக் குலை சாடித் தூங்கும் தெங்கம் பழம் சிதறி, விரிந்த பசுநெட்டிலைக் கமுகின் மேவிக் ககனத் தருவை அதன் மீது படர் பூங்கொடி வழிபோய் மிதித்துக் குனித்து விளையாடி, வரிந்த கழையின் நெடுகயிற்று வழிபோய் நடிக்கும் பொருநர் திறம் ஆன குரக்குக் குலங்கள் திக்கும் வளம் சேர் பொதும்பர் சூழ் குளத்தூர், பரிந்து தொழுவோர் மனத்து நறும் பாகே தாலோ தாலேலோ; பணிலம் உயிர்த்த தரளநகைப் பாவாய் தாலோ தாலேலோ.

Meaning

The bees bore into the honeyed sweet sugarcane and draw it out and pour it; tasting it, striking the bunch of plantain and the hanging coconut fruit so that it scatters, climbing the areca with its wide green long leaves, going by the flowering creeper that spreads over the sky-tree, treading and swinging and playing, going along the long rope of the lined bamboo and dancing, in the manner of the dancers — the troops of monkeys bound about the rich thickets that ring Kulathur: sweet syrup in the hearts of those who love and serve, தாலோ தாலேலோ. O doll of the pearl smile the conch breathed out, தாலோ தாலேலோ.

சொற்பொருள் Word by word

கரும்பு
sugarcane, in செழுங்கரும்பு
கமுகு
areca, in கமுகின்
பொருநர்
the dancers, in பொருநர்திறம்
குரங்கு
monkey, in குரக்குக்குலம்
பாகு
syrup, in பாகே

விளக்கம்

இப்பாடல் ஒரு ஊரின் தெருக்காட்சி: கரும்பு, வாழை, தென்னை, கமுகு, பூங்கொடி. காட்சி முழுவதும் குரங்குகளின் ஆட்டம் ஆகிறது — தொங்கி, மிதித்து, குனிந்து, கயிற்றில் நடந்து.

இறுதியில் குரங்குகளின் ஆட்டம் 'பொருநர் திறம்' என்று நாடக ஆட்டமாகச் சொல்லப்படுகிறது. ஊரின் வளமும் குரங்குகளின் குறும்பும் ஒரே காட்சியில் சேர்ந்து, தாலாட்டின் இனிப்பாக மாறுகின்றன.

Explanation

The verse is a street view of a town: sugarcane, plantain, coconut, areca, a flowering creeper. The whole scene becomes a troop of monkeys — hanging, treading, bending, walking a rope.

At the end their play is called the skill of dancers. The town's wealth and the monkeys' mischief meet in one sight and turn into the lullaby's sweetness.

சிந்தனைக்கு

ஊரின் வளத்தைக் குரங்குகளின் குறும்பின் வழியாகக் காட்டுவது என்ன பார்வை?

To reflect on

What way of seeing shows a town's wealth through the mischief of monkeys?