verse 79 · Kulathur Amuthambikai Pillaitamil · Sivagnana Swamigal

குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 79 · அம்மானைப் பருவம்

வடங்கெழு கொங்கை நிகர்ப்ப வளர்ந்த வடாது பொருப்பினைநின் -மகிணர் கரத்தினி லின்னும் வளைத்திடு மாறொரு சூழ்ச்சிநினைந், --துடங்கழி மூன்று புரங்களை மீண்டு முலாவ வெழுப்பிவரம் -உதவிவெளிக்கண் விடுத்தல் கடுத்திட வொள்ளொளி முத்தினுமேர், --முடங்க லுறாதொளிர் நீல மயத்தினு மொய்த்த பசும்பொனினும் -முற்ற வமைத்து விடுத்தரு ளம்மனை மூன்றும்விண் மீதுலவ -அடங்கிய வன்ப ருளங்குடி கொண்டவ ளாடுக வம்மனையே -அரந்தை துரந்து குளந்தை புரந்தவ ளாடுக வம்மனையே.
Share