சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 2 · காப்புப் பருவம்
பூ மேவு கமலப் பொகுட்டில் நான்முகனைஉந்திக் கமல மீது பூத்துப்புவனப் பரப்பு எலாம் சிட்டித்து, மாருதப்பெற்றேரனைப் படைத்து,மாமேவு மானிட முதல் சகல உயிரையும்மலர் வாளியான் மயக்கி,மருவும்படிக்கு அருள் செய் மாதவனை யாதவனைவந்தித்து வாழ்த்தல் செய்வாம்காமேவும் இந்திராணி கஞ்சனம் எடுத்(து) எதிரில்நிற்ப இரு கமலமாதும்கவரி கை இரட்ட அரியாசன(ம்) மிசைக்கந்தவேள் கயமுகத்தனோடுமீமேவு கங்காநதிச் சடைக் கடவுளுடன்வீற்றிருந்து அரசு புரியு(ம்)மின்னார் இடைக் கவுரி பொன் ஆவுடைத்தேவிமேனியைக் காக்க என்றே.