சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 21 · செங்கீரைப் பருவம்
ஏடலர் கொன்றையும் ஆரு(ம்) நிறைந்த சடாதாரிஈசனொடும் திருமேனி ஓர் பங்கினில் வாழ் பாரிதாடலை கொண்டவர் சார் பவ சங்கட நீள் வாரிதாழ விழும் பொழுது ஓர் பெரு வங்கமதாய் வாரிநீடு பெருந்தனி வீடு அருள்கின்ற கிருபா சீலிநீன் முகில் வந்துறை மாடமு(ம்) மேடையும் ஓர் கூரும்ஆடக மன்றமு(ம்) மேவிய ராசை மின் ஆடுக செங்கீரை!ஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை!