உ. வே. சாமிநாதையர், "என் சரித்திரம்"சிந்தாமணியைத் தேடிய தமிழ்த் தாத்தா
1880இல் உ. வே. சாமிநாதையர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கற்ற அவருக்குத் தேவாரமும் புராணங்களும் நன்கு தெரியும். ஒரு நாள் அந்நகரின் நீதிபதி சேலம் இராமசுவாமி முதலியார் அவரிடம், "சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அவர் படித்ததில்லை. முதலியார் தம்மிடம் இருந்த சிந்தாமணிச் சுவடியைக் கொடுத்தார்.
படிக்கத் தொடங்கியதும் சாமிநாதையர் திகைத்தார். சொற்கள் புதியவை; சமண சமயக் கருத்துகள் அவருக்குப் பழக்கமில்லை; நச்சினார்க்கினியரின் உரையே பல இடங்களில் புரியவில்லை. அவர் பின்வாங்கவில்லை. கும்பகோணத்துச் சமணப் பெரியவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் சமய நூல்களைக் கேட்டறிந்தார். ஊர் ஊராகச் சென்று சிந்தாமணியின் பிற சுவடிகளைத் தேடினார்; ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பிழைகளைத் திருத்தினார்.
ஏழு ஆண்டுகள் உழைப்புக்குப் பின், 1887இல் நச்சினார்க்கினியர் உரையோடு சீவக சிந்தாமணி அச்சில் வந்தது. அதன் பின் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும், பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும், சுமார் தொண்ணூறு நூல்களைச் சுவடிகளிலிருந்து மீட்டார். அதனால் அவரைத் "தமிழ்த் தாத்தா" என்று போற்றுகிறோம்.
கறையான் அரித்தும் ஆற்றில் விடப்பட்டும் எரிக்கப்பட்டும் அழிந்துகொண்டிருந்த சுவடிகளை ஒருவர் தம் வாழ்நாளையே கொடுத்துக் காத்தார். இன்று நாம் இங்கே படிக்கும் ஒவ்வொரு வரியின் பின்னும் அந்த உழைப்பு இருக்கிறது.
U. Ve. Swaminatha Iyer, En Charithiram (The Story of My Life)How the Tamil Thatha went looking for the Sindhamani
In 1880 U. Ve. Swaminatha Iyer was the Tamil teacher at the Government College in Kumbakonam. He had studied under the great scholar Meenakshisundaram Pillai at the Thiruvavaduthurai Adheenam and knew the Thevaram and the Puranas well. One day the town's judge, Salem Ramaswami Mudaliar, asked him, "Have you read the Seevaka Sindhamani?" He had not. Mudaliar handed him his own palm-leaf manuscript of the book.
When he began to read, Swaminatha Iyer was lost. The words were unfamiliar, the Jain teachings were new to him, and in many places even Nachchinarkkiniyar's commentary made no sense to him. He did not give up. He went to the homes of the Jain elders of Kumbakonam and learned their scriptures from them. He travelled from town to town in search of other manuscripts of the Sindhamani, compared each one and corrected the errors.
After seven years of work, in 1887, the Seevaka Sindhamani came out in print with Nachchinarkkiniyar's commentary. After it he recovered the Silappathikaram and the Manimekalai, the Ten Idylls and the Eight Anthologies, some ninety books in all, from palm leaves. That is why Tamils call him Tamil Thatha, the grandfather of Tamil.
Manuscripts were being lost to termites, cast into rivers and burned. One man gave his whole life to saving them. Behind every line we read here today stands that labour.