ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள்யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய்நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்உரை மூதாளன் உறைவிடம் குறுகிமைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடிமும் முறை வணங்கி முறையுளி ஏத்திபுது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடைஅணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம்நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்அளித்த பிறப்பின் ஆகிய கணவனைகளிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்திமாதவி ஆகியும் சுதமதி ஆகியும்கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால்பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும்உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்தெய்வம் போய பின் தீவதிலகையும்ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கைவணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்'போக' என மடந்தை போந்த வண்ணமும்மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்மணிமேகலை உரை மாதவன் கேட்டுதணியா இன்பம் தலைத்தலை மேல் வர'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்கஉற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்தஅந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம்ஆதி முதல்வன் அடி இணை ஆகியபாதபங்கய மலை பரவிச் செல்வேன்கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன்"மா பெருந் தானை மன்ன! நின்னொடும்தேவியர் தமக்கும் தீது இன்றோ?" எனஅழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகிஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்றுமதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறிதாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப"பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன்ஆடும் கூத்தியர் அணியே போலவேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' எனமணிமேகலைமுன் மடக்கொடியார் திறம்துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்தநறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய்தரும தலைவன் தலைமையின் உரைத்தபெருமைசால் நல் அறம் பெருகாதாகிஇறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழிஅறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்குசெயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்றுஉயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டதுதண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்உண்டு என உணர்தல் அல்லது யாவதும்கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றதுசலாகை நுழைந்த மணித் துளை அகவையின்உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும்ஆங்கு அத் துளை வழி உகு நீர் போலஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச்சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்துமிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்பஇருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்துவிரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்னஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடுபெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழிஇரும் பெரு நீத்தம் புகுவது போலஅளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்அவிர் ஒளி காட்டும் மணியே போன்றுமைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப்புத்த ஞாயிறு தோன்றும்காலைதிங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்கதங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணாவளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்பறவை பயன் துய்த்து உறைபதி நீங்காவிலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்கூனும் குறளும் ஊமும் செவிடும்மாவும் மருளும் மன் உயிர் பெறாஅஅந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்போதி மூலம் பொருந்திய சிறப்பின்நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்பிறவி தோறும் மறவேன் மடக்கொடி!மாதர் நின்னால் வருவன இவ் ஊர்ஏது நிகழ்ச்சி யாவும் பல உளஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லதுபூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்!ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும்பாதபங்கய மலை பரசினர் ஆதலின்ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடுஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடிதொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப்பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய்ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனைமக்கள் தேவர் என இரு சார்க்கும்ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும்தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெடஎடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என்
Listen
Share
விளக்கம்
அறவண அடிகளை மணிமேகலை வணங்குகிறாள். குருவும் மாணவியும் முதன்முதலாகச் சந்திக்கும் காட்சி இது.
அமுதசுரபி உணவைத் தரும்; ஆனால் அது ஏன் தர வேண்டும் என்ற கேள்விக்கு விடை குருவிடம்தான் இருக்கிறது. அறத்தின் கருவியைப் பெற்றவள் இப்போது அதன் பொருளைக் கற்கத் தொடங்குகிறாள் — கதையின் கல்விப் பாதை இங்கே திறக்கிறது.