Kadai 8 · Manimekalai · Seethalai Sathanar

மணிமேகலை 8 · துயிலெழுப்பிய காதை

மணிமேகலை தனை மணிபல்லவத்திடைமணிமேகலா தெய்வம் வைத்து நீங்கிமணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்டஉதயகுமரன் உறு துயர் எய்தி'கங்குல் கழியின் என் கை அகத்தாள்' எனபொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்முன்னர்த் தோன்றி 'மன்னவன் மகனே!கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லைமன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்தஅவத் திறம் ஒழிக' என்று அவன்வயின் உரைத்த பின்உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி'இந்திர கோடணை இந் நகர்க் காணவந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்குஇன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கேவந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உளமாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்உரையாய் நீ அவள் என் திறம் உணரும்"திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" எனகோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்நாமம் செய்த நல் நாள் நள் இருள்"காமன் கையறக் கடு நவை அறுக்கும்மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றேநனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை' என்றுஅந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்குஅகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடுவகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டிஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்கூடிய குயிலுவக் கருவி கண் துயின்றுபண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடைகொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டுவளை சேர் செங் கை மெல் விரல் உதைத்தவெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்பண்பு இல் காதலன் பரத்தமை நோனாதுஉண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்றுதெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்தளர் நடை ஆயமொடு தங்காது ஓடிவிளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்திஅமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிகுதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்துதூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்கா உறை பறவையும் நா உள் அழுந்திவிழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்றுபழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின்யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்துநிறை அழி யானை நெடுங் கூ விளியும்தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்துபழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகைவிரவிய மகளிர் ஏந்திய தூமத்துபுதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம்தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து'கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க' எனஇடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்'மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க' எனநின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்பகேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்துமுருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில்திருந்து எயில் குடபால் சிறு புழை போகிமிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்தசக்கரவாளக் கோட்டத்து ஆங்கண்பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டியஅந்தில் எழுதிய அற்புதப் பாவைமைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவதிப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்'இரவிவன்மன் ஒரு பெரு மகளே!துரகத் தானைத் துச்சயன் தேவி!தயங்கு இணர்க் கோதை தாரை சாவுறமயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்!காராளர் சண்பையில் கௌசிகன் மகளே!மாருதவேகனோடு இந் நகர் புகுந்துதாரை தவ்வை தன்னொடு கூடியவீரை ஆகிய சுதமதி கேளாய்!இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்துதன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்குஇலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்அஞ்சல்' என்று உரைத்தது அவ் உரை கேட்டுநெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்காவலாளர் கண் துயில்கொள்ளத்தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்பவலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்பபொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்பபணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப்பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப்பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக்கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக்குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக்கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்தமா நகர் வீதி மருங்கில் போகிபோய கங்குலில் புகுந்ததை எல்லாம்மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்நல் மணி இழந்த நாகம் போன்று அவள்தன் மகள் வாராத் தனித் துயர் உழப்பஇன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்துன்னியது உரைத்த சுதமதி தான் என்
Share
கதை

காதை 7 · துயிலெழுப்பிய காதை

காதை 7