Kadai 9 · Manimekalai · Seethalai Sathanar

மணிமேகலை 9 · மணிபல்லவத்துத் துயருற்ற காதை

ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடைதத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்முத்து விளை கழனி முரி செம் பவளமொடுவிரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கிவண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சிமுடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதிகாதல் சுற்றம் மறந்து கடைகொளவேறு இடத்துப் பிறந்த உயிரே போன்றுபண்டு அறி கிளையொடு பதியும் காணாள்கண்டு அறியாதன கண்ணில் காணாநீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப'உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!நனவோ கனவோ என்பதை அறியேன்!மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!ஒரு தனி அஞ்சுவென் திருவே வா!' எனத்திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்அன்னச் சேவல் அரசன் ஆகபல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டிபாசறை மன்னர் பாடி போலவீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழஅரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கிவீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி'எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்பகோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்துவை வாள் உழந்த மணிப் பூண் அகலத்துஐயாவோ!' என்று அழுவோள் முன்னர்விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பிஉரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்றுவிதி மாண் நாடியின் வட்டம் குயின்றுபதும சதுரம் மீமிசை விளங்கி'அறவோற்கு அமைந்த ஆசனம்' என்றேநறு மலர் அல்லது பிற மரம் சொரியாதுபறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராதுதேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகைபிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி'எமது ஈது' என்றே எடுக்கல் ஆற்றார்தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்'இருஞ் செரு ஒழிமின் எமது ஈது' என்றேபெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்
Share
கதை

காதை 8 · மணிபல்லவத்துத் துயருற்ற காதை

காதை 8