காதை 6 · சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
காதை 6
அந்தி மாலை நீங்கிய பின்னர்வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்சான்றோர் தம் கண் எய்திய குற்றம்தோன்றுவழி விளங்கும் தோற்றம் போலமாசி அறு விசும்பின் மறு நிறம் கிளரஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரியஉருவு கொண்ட மின்னே போலதிருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்பாத பீடிகை பணிந்தனள் ஏத்திபதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகிசுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' எனஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்தணியா நோக்கம் தவிர்ந்திலனாகிஅறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்ததிருந்து எயில் குடபால் சிறு புழை போகிமிக்க மாதவர் விரும்பினர் உறையும்சக்கரவாளக் கோட்டம் புக்கால்கங்குல் கழியினும் கடு நவை எய்தாதுஅங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்அம் செஞ் சாயல் நீயும் அல்லதுநெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்சக்கரவாளக் கோட்டம் அஃது எனமிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்ஈங்கு இதன் காரணம் என்னையோ?' எனஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்'மாதவி மகளொடு வல் இருள் வரினும்நீ கேள்' என்றே நேர் இழை கூறும் 'இந்நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றியஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலதுஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்துஉள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்துநெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கியகாப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடைஉலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர்தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றிபீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்நால் வேறு வருணப் பால் வேறு காட்டிஇறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்தகுறியவும் நெடியவும் குன்று கண்டன்னசுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்துசுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்இரவும் பகலும் இளிவுடன் தரியாதுவருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றிநெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்நீள் முக நரியின் தீ விளிக் கூவும்சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாதுதான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கிகான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்துகாய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்துபுள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடுமடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்குஇருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலைதவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்முதியோர் என்னான் இளையோர் என்னான்கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்துமிக்க நல் அறம் விரும்பாது வாழும்மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் எனசார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்றுஅன்புறு மாக்கட்கு அறியச் சாற்றிவழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்துஅலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டுஉலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டுநிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்கடகம் செறித்த கையைத் தீநாய்உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலைகாய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்துமண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்திஇரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்புயலோ குழலோ கயலோ கண்ணோகுமிழோ மூக்கோ இதழோ கவிரோபல்லோ முத்தோ என்னாது இரங்காதுகண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்துதண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்கண்டனன் வெரீஇ கடு நவை எய்திவிண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து "ஈங்குஎம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன்" எனதம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்"பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னையாரும் இல் தமியேன் என்பது நோக்காதுஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?துறையும் மன்றமும் தொல் வலி மரனும்உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்தகவு இலைகொல்லோ சம்பாபதி!" எனமகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற"கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்திஇடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனைஎன் உற்றனையோ? எனக்கு உரை" என்றேபொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற"ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னைஅணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டதுஉறங்குவான் போலக் கிடந்தனன் காண்" என"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணாபிணங்கு நூல் மார்பன் பேது கந்தாகஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்ததுமா பெருந் துன்பம் நீ ஒழிவாய்" என்றலும்"என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்"ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்'கொலை அறம் ஆம்' எனும் தொழில் மாக்கள்அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்இலரோ இந்த ஈமப் புறங்காட்டுஅரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!நிரயக் கொடு மொழி நீ ஒழிக" என்றலும்"தேவர் தருவர் வரம் என்று ஒரு முறைநான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்யானோ காவேன் என் உயிர் ஈங்கு" என"ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லதுஆழித் தாழி அகவரைத் திரிவோர்தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்" என்றேநால் வகை மரபின் அரூபப் பிரமரும்நால் நால் வகையில் உரூபப் பிரமரும்இரு வகைச் சுடரும் இரு மூவகையின்பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்துவரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி"அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது" எனச்சம்பாபதி தான் உரைத்த அம் முறையேஎங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டேகோதமை உற்ற கொடுந் துயர் நீங்கிஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்சம்பாபதி தன் ஆற்றல் தோன்றஎங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்துநடுவு நின்ற மேருக் குன்றமும்புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்நால் வகை மரபின் மா பெருந் தீவும்ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியனபெறு முறை மரபின் அறிவு வரக் காட்டிஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்துமிக்க மயனால் இழைக்கப்பட்டசக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்இதன் வரவு இது' என்று இருந் தெய்வம் உரைக்கமதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்திபிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்பஇறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇஅந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்தமணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்
காதை 6