காதை 1 · விழாவறை காதை
காதை 1
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇயஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்பதூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்மேலோர் விழைய விழாக் கோள் எடுத்தநால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' எனஅமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்ததுகவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்சமயக் கணக்கரும் தம் துறை போகியஅமயக் கணக்கரும் அகலார் ஆகிகரந்து உரு எய்திய கடவுளாளரும்பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள்கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்கஇடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க' எனவச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றிஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கைமுரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்'திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி'வானம் மும் மாரி பொழிக! மன்னவன்கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உளநால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்துமன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்பொன்நகர் வறிதாப் போதுவர் என்பதுதொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்துமுத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலாபதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆகவேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினைஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் எனஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி'பசியும் பிணியும் பகையும் நீங்கிவசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்திஅணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்
காதை 1