Kadai 3 · Manimekalai · Seethalai Sathanar

மணிமேகலை 3 · ஊரலர் உரைத்த காதை

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்ததீவகச் சாந்தி செய்தரு நல் நாள்மணிமேகலையொடு மாதவி வாராத்தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வரசித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கிதத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழிவயந்தமாலையை 'வருக' எனக் கூஉய்'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' எனவயந்த மாலையும் மாதவி துறவிக்குஅயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்மணிமேகலையொடு மாதவி இருந்தஅணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇஆடிய சாயல் ஆய் இழை மடந்தைவாடிய மேனி கண்டு உளம் வருந்தி'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?"வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்கோலம் கோடலும் கோவையின் கோப்பும்காலக் கணிதமும் கலைகளின் துணிவும்நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்தஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்கற்று துறைபோகிய பொன் தொடி நங்கைநல் தவம் புரிந்தது நாண் உடைத்து" என்றேஅலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லதுபலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி'நயம்பாடு இல்லை நாண் உடைத்து' என்றவயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்'காதலன் உற்ற கடுந் துயர் கேட்டுபோதல்செய்யா உயிரொடு நின்றேபொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்துநல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்காதலர் இறப்பின் கனை எரி பொத்திஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காதுஇன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடுஉடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்துஅத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழைகணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்பகண்ணீர் ஆடிய கதிர் இள வன முலைதிண்ணிதின் திருகி தீ அழல் பொத்திகாவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டியமா பெரும் பத்தினி மகள் மணிமேகலைஅருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்மற வணம் நீத்த மாசு அறு கேள்விஅறவண அடிகள் அடிமிசை வீழ்ந்துமா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கிகாதலன் உற்ற கடுந் துயர் கூறப்"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்பற்றின் வருவது முன்னது பின்னதுஅற்றோர் உறுவது அறிக!" என்று அருளிஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி"உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன்மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்தசித்திராபதிக்கும் செப்பு நீ எனஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணிஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்றுமையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்
Share
கதை

காதை 2 · ஊரலர் உரைத்த காதை

காதை 2