காதை 3 · மலர்வனம் புக்க காதை
காதை 3
வயந்தமாலைக்கு மாதவி உரைத்தஉயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றிமா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்குஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்தந்தையும் தாயும் தாம் நனி உழந்தவெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்பகாதல் நெஞ்சம் கலங்கிக் காரிகைமாதர் செங் கண் வரி வனப்பு அழித்துபுலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்டமாதவி மணிமேகலை முகம் நோக்கிதாமரை தண் மதி சேர்ந்தது போலகாமர் செங் கையின் கண்ணீர் மாற்றி'தூ நீர் மாலை தூத்தகை இழந்ததுநிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்சுதமதி கேட்டு துயரொடும் கூறும்'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டுதணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டியகடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்படை இட்டு நடுங்கும் காமன் பாவையைஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்பாராவாரப் பல் வளம் பழுநியகாராளர் சண்பையில் கௌசிகன் என்போன்இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடுஆராமத்திடை அலர் கொய்வேன் தனைமாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்தபெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்தாரன் மாலையன் தமனியப் பூணினன்பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறிநீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்இலவந்திகையின் எயில் புறம் போகின்உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்மண்ணவர் விழையார் வானவர் அல்லதுபாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்றுஉய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்தசம்பாதி இருந்த சம்பாதி வனமும்தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதைகவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடையயாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளதுவிளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளதுதூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்ததாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடாசுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்"ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல்"சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும்வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்"செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும்பயம் கெழு மா மலர் இட்டுக்காட்டமயன் பண்டு இழைத்த மரபினது அது தான்அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்'மணிமேகலையொடு மா மலர் கொய்யஅணி இழை நல்லாய்! யானும் போவல்' என்றுஅணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடிமணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇசிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்நாணமும் உடையும் நன்கணம் நீத்துகாணா உயிர்க்கும் கையற்று ஏங்கிஉண்ணா நோன்போடு உயவல் யானையின்மண்ணா மேனியன் வருவோன் தன்னை'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோஅழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாதுஇம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்ததுகொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் எனஉண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்குஅழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கிநீடலும் நீடும் நிழலொடு மறலும்மையல் உற்ற மகன் பின் வருந்திகையறு துன்பம் கண்டு நிற்குநரும்சுரியல் தாடி மருள் படு பூங் குழல்பவளச் செவ் வாய் தவள வாள் நகைஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டுகருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலைஅகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்துவாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றிநீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடியபேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்வம்ப மாக்கள் கம்பலை மூதூர்சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்மை அறு படிவத்து வானவர் முதலாஎவ் வகை உயிர்களும் உவமம் காட்டிவெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றியகண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்பொன் நாண் கோத்த நன் மணிக் கோவைஐயவி அப்பிய நெய் அணி முச்சிமயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழசெவ் வாய்க் குதலை மெய் பெறா மழலைசிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்பஅற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வரதளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரைபொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்துஇலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி'ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்காண்மினோ' என கண்டு நிற்குநரும்விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி'அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்தியதாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்நல் இள அன்னம் நாணாது ஆங்கு உளவல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பனசாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்குஎஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உகசெந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்பிடவமும் தளவமும் முட முள் தாழையும்குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பிவித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவேஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடுமலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்
காதை 3