காதை 21 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்

வழக்குரை காதை

ஆங்குக்குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லாதிசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லாவிடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லாகருப்பம்செங்கோலும் வெண்குடையும்செறிநிலத்து மறிந்துவீழ்தரும்நங்கோன்றன் கொற்றவாயில்மணிநடுங்க நடுங்குமுள்ளம்இரவுவில்லிடும் பகல்மீன்விழும்இருநான்கு திசையும் அதிர்ந்திடும்வருவதோர் துன்பமுண்டுமன்னவற் கியாம் உரைத்துமெனஆடியேந்தினர் கலனேந்தினர்அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்கோடியேந்தினர் பட்டேந்தினர்கொழுந்திரையலின் செப்பேந்தினர்வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்மான்மதத்தின் சாந்தேந்தினர்கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்கவரியேந்தினர் தூபமேந்தினர்கூனுங்குறளும் ஊமுங்கூடியகுறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தரநரைவிரைஇய நறுங்கூந்தலர்உரைவிரைஇய பலர்வாழ்த்திடஈண்டுநீர் வையங்காக்கும்பாண்டியன்பெருந் தேவிவாழ்கெனஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக்கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்பஅரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,வாயி லோயே வாயி லோயேஅறிவறை போகிய பொறியறு நெஞ்சத்துஇறைமுறை பிழைத்தோன் வாயி லோயேஇணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்கணவனை இழந்தாள் கடையகத் தாளென்றுஅறிவிப் பாயே அறிவிப் பாயே; எனவாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழிதென்னம் பொருப்பின் தலைவ வாழிசெழிய வாழி தென்னவ வாழிபழியொடு படராப் பஞ்வ வாழிஅடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடிவெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்அறுவர்க் கிளைய நங்கை இறைவனைஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்கானகம் உகந்த காளி தாருகன்பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்கணவனை இழந்தாள் கடையகத் தாளேகணவனை இழந்தாள் கடையகத் தாளே; எனவருக மற்றவள் தருக ஈங்கெனவாயில் வந்து கோயில் காட்டக்கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழிநீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்தேரா மன்னா செப்புவ துடையேன்எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்வாயிற் கடைமணி நடுநா நடுங்கஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடிமாசாத்து வாணிகன் மகனை யாகிவாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்குஎன்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்கொலைக்களப் பட்ட கோவலன் மனைவிகண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கேகள்வனைக் கோறல் கடுங்கோ லன்றுவெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழைநற்றிறம் படராக் கொற்கை வேந்தேஎன்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழியாமுடைச் சிலம்பு முத்துடை அரியேதருகெனத் தந்து தான்முன் வைப்பக்கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்பமன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டுதாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்டயானோ அரசன் யானே கள்வன்மன்பதை காக்குந் தென்புலங் காவல்என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளெனமன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்றுஇணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.வெண்பாஅல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும்பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லாவடுவினையே செய்த வயவேந்தன் றேவிகடுவினையேன் செய்வதூஉங் காண்.காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்கூடலான் கூடாயி னான்.மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்உண்டளவே தோற்றான் உயிர்.
பகிர்

விளக்கம்

அரசவையில் கண்ணகி வழக்குரைக்கிறாள். சிலம்பை உடைத்துக் காட்டி, அதில் இருப்பதை வைத்து உண்மையை நிறுவுகிறாள்; பாண்டியன் தன் தவறை உணர்ந்து உயிரை விடுகிறான்.

இந்த அத்தியாயம் தமிழின் முதல் நீதிமன்றக் காட்சி என்று சொல்லப்படுவது பொருத்தமே. வாதம் செய்வது ஒரு பெண்; கேட்பது ஒரு அரசன்; தீர்ப்பு விழுவது அரசன் மேலேயே.