காதை 22 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்

வஞ்சின மாலை

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்யாவுந் தெரியா இயல்பினே னாயினும்முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடுபிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலேவன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாகமுன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக்கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்றுஉரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்துஅழியாது சூழ்போக வாங்குந்தி நின்றவரியா ரகலல்குல் மாதர் உரைசான்றமன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்றுகல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்துமுன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டுபொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னிமணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாயமாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்றுவீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத்தானோர் குரக்குமுக மாகென்று போனகொழுநன் வரவே குரக்குமுக நீத்தபழுமணி அல்குற்பூம் பாவை விழுமியபெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்தநுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்டகொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டிநீடித் தலையை வணங்கித் தலைசுமந்தஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடியமட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலாநான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்தகோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்றுஇடமுலை கையால் திருகி மதுரைவலமுறை மும்முறை வாரா அலமந்துமட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்துவிட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்தநீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்துமாலை எரியங்கி வானவன் தான்தோன்றிமாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்தியபொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றேநற்றேரான் கூடல் நகர்.வெண்பாபொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத்தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்மாத்துவத் தான்மறைந்தார் மற்று.
பகிர்

விளக்கம்

வஞ்சினம் என்பது சபதம். கணவனை இழந்த கண்ணகி, 'பட்டாங்கியானும் ஓர் பத்தினி' என்று தன்னைச் சொல்லி, அரசனோடு மதுரையையும் ஒழிப்பேன் என்று சூளுரைக்கிறாள்; முலையைக் கையால் திருகி எறிகிறாள்.

அப்போது பார்ப்பனக் கோலத்தில் அங்கி தோன்றி, 'பாயெரி இந்தப் பதியூட்ட' என்று ஏவுகிறான். 'பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்று' என்று கூடல் நகர் முழுவதும் புகையில் மூழ்குகிறது — ஒரு தனிப்பட்ட இழப்பு ஒரு நகரத்தின் மேல் விழும் தீர்ப்பாகும் கணம் இது.