verse 75 · Tirunelveli Kanthimathi Pillaitamil · V. Azhagiyachokkanatha Pillai
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 75 · அம்மானைப் பருவம்
இருள்நசிக் குங்கதிர்த் தரளவம் மனைபொன்னிழைத்தவம் மனைசெந்நிறத்திலகுமின மணிகுயிற் றம்மனையொள்நீலத்தியங்குமம் மனைமரகதத்தருணமணி யம்மனையிவ் வைத்துந் தொகுத்துவெண்டாமரைப் பனுவலாட்டிதாக்கணங் கடுதொழி லுருத்திரி மயேச்சுவரிதனிமனோன் மணியாமெனநிருணயிக் கும்பெயரின் ஐவகைச் சத்திகளும்நின்பா லுதித்தொடுங்காநிற்பரென ஆரணம் நிகழ்த்துமூ துரைநிலைநிறுத்திடக் காட்டுநெறி போல்அருணவிக சிதமலர்ச் செங்கைமலை மங்கைநீஅம்மானை யாடியருளேஅழகார்ந்த திருநெல்லை மகிழ்காந்தி மதிவல்லஅம்மானை யாடியருளே.