'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்தபிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது' எனவிரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்துபொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தெனவந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகிபொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்தவறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்இள வள ஞாயிறு தோன்றியதென்னநீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக" என்றேவலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி'உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்என் பெருங் கணவன் யாங்கு உளன்?' என்றலும்'இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடுபுலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழிசாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்தரும சக்கரம் உருட்டினன் வருவோன்வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்வந்து தோன்றலும் மயங்கினை கலங்கிமெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனைநல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்சஇராகுலன் "வந்தோன் யார்?" என வெகுளலும்விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா"வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காதுநா நல்கூர்ந்தனை" என்று அவன் தன்னொடுபகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு"அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்உண்டி யாம் உன் குறிப்பினம்" என்றலும்"எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க" எனஅந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்உவவன மருங்கில் உன்பால் தோன்றியஉதயகுமரன் அவன் உன் இராகுலன்ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின்கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் எனஅறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின்தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடிகங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழிமற வணம் நீத்த மாசு அறு கேள்விஅறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை"ஈங்கு வந்தீர் யார்?" என்று எழுந்து அவன்பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்"ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்மா துயர் எவ்வம் மக்களை நீக்கிவிலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கிஉடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உகதொன்று காலத்து நின்று அறம் உரைத்தகுன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இதுபாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயதுதொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப்பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும்" எனஅன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாதுசென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர்அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனைபிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவைபல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி'மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீமன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்திநின் 'பதிப் புகுவாய்' என்று எழுந்து ஓங்கி'மறந்ததும் உண்டு' என மறித்து ஆங்கு இழிந்து'சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்மக்கள் யாக்கை உணவின் பிண்டம்இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்' என்றுஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்துநீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்
Listen
Share
விளக்கம்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி ஒரு மந்திரத்தை ஓதுகிறாள்; 'இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்' என்று அது பசியை வெல்லும் வரம். மந்திரம் இங்கே மாயம் அல்ல; அதை ஏற்கும் மனநிலையே அதன் சக்தி.
தெய்வம் முந்தைப் பிறப்பையும் நினைவூட்டுகிறாள். மணிமேகலை மந்திரத்தைப் பெற்றுக்கொண்டு அடுத்த படிக்குத் தயாராகிறாள் — வரம் வருவதற்கு முன் அதை ஏற்கும் இதயம் வளர்கிறது.