verse 60 · Kulathur Amuthambikai Pillaitamil · Sivagnana Swamigal
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 60 · வாரானைப் பருவம்
தீது விளைக்குங் களப்பணியுந் தேவர்குரவன் மனைச்செல்வி -திருக்கற் பளித்த களப்பணியுந் திளைத்துக் கலவி செயப்புகுங்காற்,கோது விளைக்கும் பேரச்சக் குணமு நாணுங்கொடுக்குமெனக் -குறியேனினது சாயலுமின கொழிக்குங்காஞ்சி யல்குலுமே,போது விளைக்குஞ் சடைக்காட்டிற் புகுந்து, வெளிக்கொ ளாதொளிக்கப் -பொலிவு தருமா லெனச்சகிமார் புகலச் சற்றே நகைத்தளிகள்,வாது விளைக்கு முடிசாய்க்கு மாதே வருக வருகவே -வளங்கூர் குளந்தைப் பதியமுத வல்லி வருக வருகவே.