verse 93 · Kulathur Amuthambikai Pillaitamil · Sivagnana Swamigal

குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 93 · ஊசற் பருவம்

செயலையந் தாருவை யுதைத்தாடு தொறுமச் செழுந்தருப் பூக்கள்சொரியுஞ் -செயலுதைக் காற்றாது தனைநீங்க வெண்ணிநந் தேவைத் தணந்துவிளையாட், --டியலைமேல் கொண்டநின் மீதலர்ப் பூம்பகழி யிளையாது சொரிவதெனவும் -இதுகண் டதற்குநேர் விழிச்சுரும் பீந்தருளி யிளநிலா நகைமுகிழ்ப்ப, --அயலுறூஉங் கொடிமுல்லை யூழ்த்தலர் சொரிந்திட லருந்துணைமை பூண்டுதானும் -அலர்வாளிபெய்திடுந் திறனெனவு மேர்காட்ட வைம்படை பொறுத்த பச்சைப், --புயலொடு பிறந்தருட் கடலொடு வளர்ந்தமின் பொன்னூச லாடியருளே -பூரண மதிக்கருள் புரிந்தகம லாகரீ பொன்னூசலாடியருளே.
Share