verse 39 · Sankarankovil Komathi Pillaitamil · Puliyangudi Muthuveerak Kavirayar

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 39 · சப்பாணிப் பருவம்

பட அரவத் தலை இடம் என வைத்துறைபரவை உடைப் படர் நிலமாதின்பருவ முகில் குல கருநிற கச்சிடுபலமணி துற்றிய இரு பாரத்தடமுலை ஒத்திடு பொதியம் உயர்த்திடுகைலை வரைச் சமம் உறமேனாள்சகல உயிர்க்கு உயிர் எனும் அரன் நட்பொடுதருவன் உனக்கு நன்மண சேவைவிடை பெறு தெக்கணம் நிலைபெற இக்கணம் எனவிமலற்கு உளம் மகிழ்வாகவிரைவினில் அப்பொதிய மலையின் உற்று அவண்விழை தமிழுக்கு உறையுள் அதாய் வாழ்குட முனி அற்புடன் வழிபடு சிற்பரைகொட்டுக சப்பாணிகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்கொட்டுக சப்பாணி
Share