verse 49 · Sankarankovil Komathi Pillaitamil · Puliyangudi Muthuveerak Kavirayar

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 49 · முத்தப் பருவம்

கொங்கில் பொலிந்த நால்வகை வண்டு கூட்டுணும்கொள்ளை மது ஊற்று மலரில்குண்டல உடுக்குலம் தங்குலம் எனக் கூடுகொம்பர் வீண் தோய் பொழிலினும்மங்குல் குலங் கடல் புனல் உண்டு கருமேனிவாய்ந்து கருவுற்று மேற்கின்மன்னிய விலங்கலைப் பிரசவிக்கும் தலம்எனக் கருதி வரும் வட்டையில்துங்கப் பெருங்கயிலை என்ன வெண்சுதை தீற்றுசுவண மாளிகைகள் வரையாய்த்தோற்ற மீது எறும் அக்கிரகத்தின் உச்சியில்சுடர் மணியின் மீது வெள்ளைத்திங்கள் தவழ்ந்து உலவு வரராசை அன்னை நின்செவ்வாயின் முத்தம் அருளே!சேமநிதியாய் அடியர் காமியம் அளித்த சிவைசெவ்வாயின் முத்தம் அருளே!
Share