பாடல் 50 · முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 50 · முத்தப் பருவம்
வடிவி னழகு மெழுத வரிய புயமு நறிய செச்சையும்மருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும்கடவு மயிலு மயிலு மொழுகு கருணை வதன பற்பமும்கமல விழியும் விழியு மனமும் எழுதி யெழுதி நித்தலும்அடிக ளெனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வேறமரர் குழுவு மகில மறையும் அரியு மயனு முற்றுநின்முடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமேமுனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே.