காதை 31 · சிலப்பதிகாரம் · இளங்கோ அடிகள்

வரந்தரு காதை

வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகைகடவுட் கோலம் கட்புலம் புக்கபின்தேவந் திகையைச் செவ்விதின் நோக்கிவாயெடுத் தரற்றிய மணிமே கலையார்யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக்கோமகன் கொற்றங் குறைவின் றோங்கிநாடு பெருவளஞ் சுரக்கென் றேத்திஅணிமே கலையா ராயத் தோங்கியமணிமே கலைதன் வான்றுற வுரைக்கும்மையீ ரோதி வகைபெறு வனப்பின்ஐவகை வகுக்கும் பருவங் கொண்டதுசெவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள்ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்தநித்தில விளநகை நிரம்பா வளவினபுணர்முலை விழுந்தன புல்லக மகன்றதுதளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்ததுகுறங்கிணை திரண்டன கோலம் பொறாஅநிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரினதலைக்கோ லாசான் பின்னுள னாகக்குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்யாது நின்கருத் தென்செய் கோவெனமாதவி நற்றாய் மாதவிக் குரைப்பவருகவென் மடமகள் மணிமே கலையென்றுருவி லாள னொருபெருஞ் சிலையொடுவிரைமலர் வாளி வெறுநிலத் தெறியக்கோதைத் தாமங் குழலொடு களைந்துபோதித் தானம் புரிந்தறம் படுத்தனள்ஆங்கது கேட்ட அரசனும் நகரமும்ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர்தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச்செம்மொழி மாதவர் சேயிழை நங்கைதன்றுற வெமக்குச் சாற்றின ளென்றேஅன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர்பருவ மன்றியும் பைந்தொடி நங்கைதிருவிழை கோலம் நீங்கின ளாதலின்அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின்குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத்துடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய்மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள்திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்உலறிய நாவினள் உயர்மொழி கூறிக்தெய்வமுற் றெழுந்த தேவந்திகைதான்கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன்கடவுண் மங்கலங் காணிய வந்தமடமொழி நல்லார் மாணிழை யோருள்அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்றஇரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும்ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன்சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள்மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பியஅணிகயம் பலவுள ஆங்கவை யிடையதுகடிப்பகை நுண்கலுங் கவரிதழ்க் குறுங்கலும்இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும்உண்டோர் சுனையத னுள்புக் காடினர்பண்டைப் பிறவிய ராகுவ ராதலின்ஆங்கது கொணர்ந்தாங் காயிழை கோட்டத்தோங்கிருங் கோட்டி யிருந்தோய் உன்கைக்குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன்உறித்தாழ் கரகமும் உன்கைய தன்றேகதிரொழி காறுங் கடவுட் டன்மைமுதிரா தந்நீர் முத்திற மகளிரைத்தெளித்தனை யாட்டினிச் சிறுகுறு மகளிர்ஒளித்த பிறப்பின ராகுவர் காணாய்பாசண் டன்யான் பார்ப்பனி தன்மேல்மாடல மறையோய் வந்தே னென்றலும்மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன்தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்துகேளிது மன்னா கெடுகநின் தீயதுமாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக்கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கிஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்பாசண் டன்பாற் பாடு கிடந்தாட்காசில் குழவி யதன்வடி வாகிவந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்பார்ப்பனி தன்னோடு பண்டைத் தாய்பாற்காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்துதேவந் திகையைத் தீவலஞ் செய்துநாலீ ராண்டு நடந்ததற் பின்னர்மூவா இளநலங் காட்டியென் கோட்டத்துநீவா வென்றே நீங்கிய சாத்தன்மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்அங்குறை மறையோ னாகத் தோன்றிஉறித்தாழ் கரகமும் என்கைத் தந்துகுறிக்கோள் கூறிப் போயினன் வாரான்ஆங்கது கொண்டு போந்தே னாதலின்ஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றிஅந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்மன்னர் கோவே மடந்தையர் தம்மேல்தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்பஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின்புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக்காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்யான்பெறு மகளே என்றுணைத் தோழீவான்றுயர் நீக்கும் மாதே வாராய்என்னோ டிருந்த இலங்கிழை நங்கைதன்னோ டிடையிருள் தனித்துய ருழந்துபோனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம்யானது பொறேஎன் என்மகன் வாராய்வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தோன்உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன்எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோஎன்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப்பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன்குதலைச் செய்வாய்க் குறுந்தொடி மகளிர்முதியோர் மொழியின் முன்றில் நின்றழத்தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன்மாடல மறையோன் றன்முக நோக்கமன்னர் கோவே வாழ்கென் றேத்திமுந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன்மறையோன் உற்ற வான்துயர் நீங்கஉறைகவுள் வேழக் கையகம் புக்குவானோர் வடிவம் பெற்றவன் பெற்றகாதலி தன்மேற் காதல ராதலின்மேனிலை யுலகத் தவருடன் போகும்தாவா நல்லறஞ் செய்தில ரதனால்அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டிமடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின்உடன்வயிற் றோராய் ஒருங்குடன் றோன்றினர்ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்போய பிறப்பிற் பொருந்திய காதலின்ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கைஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றிமாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்கையகத் தனபோற் கண்டனை யன்றேஊழிதோ றூழி யுலகங் காத்துநீடுவா ழியரோ நெடுந்தகை யென்றமாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்துபாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக்கலிகெழு கூடல் கதழெரி மண்டமுலைமுகந் திருகிய மூவா மேனிப்பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்துநித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்பூவும் புகையும் மேவிய விரையும்தேவந் திகையைச் செய்கென் றருளிவலமுறை மும்முறை வந்தனன் வணங்கிஉலக மன்னவ நின்றோன் முன்னர்அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்நன்னாட் செய்த நாளணி வேள்வியில்வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்தந்தேன் வரமென் றேழுந்த தொருகுரல்ஆங்கது கேட்ட அரசனு மரசரும்ஓங்கிருந் தானையும் முறையோ டேத்தவீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பியமாடல மறையோன் றன்னொடுங் கூடித்தாழ்கழன் மன்னர் தன்னடி போற்றவேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்துதேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றிவஞ்சி மூதூர் மணிமண் டபத்திடைநுந்தை தாணிழ லிருந்தோய் நின்னைஅரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்றுஉரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்பகல்செல் வாயிற் படியோர் தம்முன்அகலிடப் பாரம் அகல நீக்கிச்சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்துஅந்தமி லின்பத் தரசாள் வேந்தென்றுஎன்திறம் உரைத்த இமையோ ரிளங்கொடிதன்திறம் உரைத்த தகைசால் நன்மொழிதெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்;ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின் ;செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்;பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்;பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;அறமனை காமின்; அல்லவை கடிமின்;கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையாஉளநாள் வரையாது ஒல்லுவ தொழியாதுசெல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்;மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.கட்டுரைமுடியுடை வேந்தர் மூவ ருள்ளும்குடதிசை யாளுங் கொற்றங் குன்றாஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்தியமறத்துறை முடித்த வாய்வாள் தானையொடுபொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்கங்கைப் பேர்யாற் றுக்கரை போகியசெங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்கிடந்த வஞ்சிக் காண்ட முற்றிற்று.நூற் கட்டுரைகுமரி வேங்கடங் குணகுட கடலாமண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும்ஒத்த மரபின் ஒழுக்கொடு புணரஎழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளைஇழுக்கா யாப்பின் அகனும் புறனும்அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கியபாடலும் எழாலும் பண்ணும் பாணியும்அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்தவரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவைதெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்ஆடிநல் நிழலின் நீடிருங் குன்றம்காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்துமணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றியசிலப்பதி காரம் முற்றும்.
பகிர்

விளக்கம்

இறுதி அத்தியாயம் கண்ணகியின் வரம். தன்னை வழிபடுபவர்களுக்கு அருள் தருவதாக அவள் சொல்கிறாள்; பத்தினி வழிபாடு நாட்டில் பரவுகிறது.

ஒரு பெண்ணின் கதை ஒரு தெய்வத்தின் கதையாகி, ஒரு நாட்டின் வழிபாடாகி, ஒரு நூலின் முடிவாகிறது. சிலம்பு மூடும் வரி ஒரு கதையை மூடுவதில்லை, ஒரு மரபைத் திறக்கிறது.