verse 100 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 100 · சிறுதேர்ப் பருவம்
வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென மணிமுறுவ னிலவுகாலும்மழலைவாய் முத்துண்டு முச்சிமோந் துந்திரு மடித்தலத் தினிலிருத்திப்பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின் படிவமா கக்காட்டியிப்பாலரொடும் விளையா டெனப்பணித் துந்தங்கள் பார்வைகளி யாடச்செயும்தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த தம்பிரா னுந்தம்பிரான்தழலுருவி லொருபாதி குளிரவொரு புறநின்ற தையனா யகியும்வைத்துச்சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள் சிறுதே ருருட்டியருளேதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.