verse 99 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 99 · சிறுதேர்ப் பருவம்
கள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங் கற்பகத் தும்படர்தலாற்காமன் பெருஞ்செல்வ மன்னவர்கள் குழுமியக் கமுகின் கழுத்தில்யாத்தஒள்ளொளிய செம்மணிப் பொன்னூசல் பன்முறை உதைந்தாட வாடுந்தொறும்ஒண்கமு கொடுந்துணர்ப் பைங்கற் பகக்காடும் ஒக்கவசை யத்தலையசைத்தள்ளிலை யலங்கல்வே லெம்பிரா னைப்பாடி ஆடுகின் றாரெனத்தாம்அலர்மாரி பொழிவபோ லங்கற் பகத்தெய்வம் அம்பொன்மலர் மாரிதூர்க்கும்தெள்ளுதமிழ் விரிபுனற் காவிரித் திருநாட சிறுதே ருருட்டியருளேதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.