verse 51 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 51 · வருகைப் பருவம்

செம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி சிலம்பொடு கலின்கலினெனத்திருவரையி லரைமணி கிணின்கிணி னெனப்பொலந் திண்டோளின் வளைகலிப்பஅம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும் ஆரமுந் திருவில்வீசஅணிமகர குண்டலம் பருதிமண் டலமென்ன அலர்கதிர்க் கற்றைசுற்றப்பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன் பட்டமொளி விட்டெறிப்பப்பங்கய மலர்ந்ததிரு முகமண் டலந்தொறும் பனிமுறுவ னிலவரும்பக்கும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக் குமாரநா யகன்வருகவேகுரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.
Share