பாடல் 16 · முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 16 · செங்கீரைப் பருவம்
செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்பைம்பொ னநசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி சரிந்தாடப்பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாடஅம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரைஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை