பாடல் 13 · முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 13 · செங்கீரைப் பருவம்
கைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக் களிற்றொடு முட்டவிட்டுக்ககனவட் டத்தினொடு பருதிவட் டத்தைவளை திகிரிவட் டத்திலிட்டுமுக்கட் டிருத்தாதை கோதண்ட மெனவைத்த வேதண்ட மாதண்டமாமூதண்ட கூடந்த்ரி கூடத் தொடுஞ்சாடி மூரிக் கடாசலமவன்மெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட மேகபட லத்துமொண்டுமேல்கட லினைப்பெருங் கீழ்கடல் புகப்பெய்து விளையாட்டு வீரர்களொடும்திக்கெட்டும் விளையாடு சேனா பதிக்கடவுள் செங்கீரை யாடியருளேசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே.