உடம்பு கட்டப்படுவதும், அரிதான தளை வாயில் பெய்யப்படுவதும், போக்கப்படுவதும், புலைநகருக்கு உய்ப்பதும் நாக்கினாலேயே நடக்கும்; ஐம்பொறிகளுள் நாக்கே பெரிதும் காக்கப்பட வேண்டியது என்கிறது செய்யுள்.
பொய், புறங்கூறல், வசை — எல்லாம் நாவின் தொழில். அதனால் அறவுரைகள் அடிக்கடி நாவை அடக்கும் பாடல்களாக வருகின்றன. இது புறத்திரட்டில் மேற்கோளாக எஞ்சிய செய்யுள்.