பாடல் 82 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 82 · நீராடற் பருவம்

வந்து படிபவர் பாவ மோசனஞ் செய்யவடகங்கை பரிசுத்தம் அடையவரிவிழிக் கடை அருளின் எள்ளளவு நல்கிவெள்வாணியும் பரிதி முதல்வன்தந்த சேயான காளிந்தியும் தங்கள்பால்சார்ந்து தானம் புரிதரத்தவம் உயற்றும் ஞானவானந்த வெள்ளமே!சங்கரக் கடவுள் பாகம்சொந்தமாகக் கொண்ட மரகதக் குயிலே!துழாய்த் திருமுடித் துணைவர் தம்துணைவியும் பாரதியும் இருபுறமும் கைலாகுதர ஒரு சுடர்க் கொடி எனஅந்தரத்தவர் ஆடு பொருநை நதி அமுத நீர்அம்மை நீ ஆடி அருளே!ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவிஅம்மை நீராடி அருளே!
பகிர்