பாடல் 79 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 79 · அம்மானைப் பருவம்

காலை இரவிக்கு நிகர் செம்பொனால் செய்துகவின் மணிகள் ஒன்பதும் அழுத்திக்ககன முடியைத் தடவு கோபுரமும் அண்டப்புறச்சுவர் எனக் கதித்தநாலுபாலும் சூழ்ந்த திருமதிலும் நந்தி பின்நாட்டிய துவசத் தம்பமும்நால்வருக்கு அருள் செய்த இருமறைத் திருவாயர்நடனமிடு நாத சபையும்வேலை வாளைப் பொருத விழி உருத்திர கணிகைமின்னார்கள் பரத முறையாய்மிளிர் கொடி எனத் துவண்டு ஆடும் மண்டபமும்இம் மேதினியினில் கயிலை நேர்ஆலயந் திகழும் வரராசை அம்பிகை தேவிஅம்மானை ஆடி அருளே!அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மைஅம்மானை அடி அருளே!
பகிர்