பாடல் 76 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 76 · அம்மானைப் பருவம்
செல்லார் குழல் செருக்கு அசைய அதன் மேல் அணிசெழும் பிறைப் பணி கருமுகில்சேர்ந்த பிறை போல் தவழ இருதனச் சுமையினால்சேன் இடைக் கமலம் என்னஇல்லாத சிற்றிடையு(ம்) நைந்திடைப் பாரமுலையினின் இட்ட ஆரம் அசையஇரு கரத்து இட்ட நவமணி வளைகள் கலகலெனஇம்பர் முதலா எழுந்தபல்லாயிரம் கோடி அண்டமும் கற்பித்தபானல் விழி இமையாது விண்பண்ணவர்கள் உண்ண அமுதம் கொடுத்துக் காளம்உண்ட பரிசு அறிய வைத்தஅல்லார் களத்தன் ஒரு பாகத்தின் மேவு மயில்அம்மானை ஆடி அருளே!அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மைஅம்மானை ஆடி அருளே!