பாடல் 72 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 72 · அம்மானைப் பருவம்

செங்கயலை வென்ற இருகண் பார்வை இமையாதுசெழுமணியின் முத்தம்மனைசேண் இடை எறிந்திடத் திங்கள் மண்டல வரைச்சென்ற மதி தன்னை நோக்கிஎங்கள் நாயகி திருமுகத்து எழிலை வவ்வி நீஇங்கு வான் இடை வதிந்தாய்என்று உடலை எற்றிப் புடைத்துத் திரும்பி வந்துஎழில் தரு மலர்க்கரத்தில்தங்கிய அனக்குஞ்சினைப் பொரு வியப்பினைத்தந்து மன மகிழ்வித்திடத்தண்சினை விரிந்த புன்னாக வன நீழலில்சங்க பத்மர்கள் இறைஞ்சும்அங்கயிலை அண்ணல்பால் இங்கிதமோடு ஆடுகொடிஅம்மானை ஆடி அருளே!அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மைஅம்மானை ஆடி அருளே!
பகிர்