சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 73 · அம்மானைப் பருவம்
மாணிக்க முத்து இழைத்திட்ட அம்மனைகள் இருவனசக் கரத்தின் ஏந்திவான் நோக்கி வீச மேற்சென்று கீழ் வருதல்மதி கதிர் இருவர் வந்து நின்முன்பேணிப் பணிந்து வரம் வேண்டுதற்காக வருபெற்றிது எனத் துலங்கப்பெருகு சுர கங்கை அலம் வர எம்பிரான் மகிழ்பிறங்கச் சிரம் துளக்கப்பாணிற்கு இசைந்த இசை பயில்கின்ற சகி மாதர்பக்கத்தில் நின்று நின்கண்பார்வை மேல் நோக்கம் வைத்து இமையாது நின்றுஅர மடந்தையர்கள் பார்வை காட்டஆணில் சிறந்த மதனுக்கு உரிமை மாமி உமைஅம்மானை ஆடி அருளே!அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மைஅம்மானை ஆடி அருளே!