சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 69 · அம்புலிப் பருவம்
கங்கை அணி கடவுள் தன் கைமானும் இவள்இணைக்கண் மானும் நின் மானும்எக்காலும் கலந்து உறவதாகும் இவள் முகமதிக்கதிரினில் நிறைவு பெற்றுத்துங்க மதி ஆகுவாய் அரன் அரியும் ஓர் உருத்தோற்றமாய் உறைதலாலேசொன்ன மகமேரு நிகர் கருடனும் இத்தலத்துஉறைகுவான் அவன் இடத்தில்வெங்கொடும் பாந்தள் உன் மீது வாராது விடம்மீட்கு மந்திரம் அறிகுவாய்வேனில் கொடும் கோடை நீக்கவும் புன்னை வனமென்னிழலும் உண்டு கண்டாய்அங்கை அயில் வைத்த குகனைப் பெற்ற அன்னையுடன்அம்புலீ ஆடவாவே!அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடுஅம்புலீ ஆடவாவே!