சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 66 · அம்புலிப் பருவம்
கான் மருவு மான்மறுவு முயன்மறுவும்அபரபக்கத்தினில் கலைகள் தேய்ந்துகதிரொளி குழைந்து முதிர் கிழவர் போலேநரைக் காயத்திலே சிலை எனக்கூன் மருவு குற்றமும் குரு மனைவியைச் சேர்ந்தகுற்றமும் மற்றை உள்ளகுற்றமும் கங்கை என நாக சுனைத் தீர்த்தம்குடைந்து கொண்டலின் மீது போய்வான் மருவு புன்னைவன நீழல் ஊற இவளைவழிபடின் நொடியினில் போக்குவாள்மதி எனப் பெயர் பெற்றும் மதியிலி எனச் சொல்லவாளாது இருந்து அலுத்தாய்ஆன் மருவி வந்தனை செய் ஆவுடைப் பார்வதியொடுஅம்புலீ ஆடவாவே!அரிஅரன் ஒன்றாக வருதவம் முயன்றவளோடுஅம்புலீ ஆடவாவே!