சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 62 · அம்புலிப் பருவம்
பேர் உலகினுக்கு ஒரு குபேரன் நீ இவளும் நிதிபெறு குபேரன் சினேகப்பெம்மான் தன் மனைவி வாட்கலை உடையை நீயும்இவள் பெருமணிக் கலையை உடையாள்நீர் உலவு பிள்ளை மதி ஆவை நீ இவள்நிழலினோடு ஆடு பிள்ளை மதியாள்நீள் பனிக்கிரணன் நீ இவளும் எந்நாளும் எழில்நிகழ் பனிக்கிரியின் மகளாம்பார்உலகில் இத்தன்மையால் இவளொடு ஒப்புஎன்று பகர்கின்ற சொல் விளங்கப்பரிய மணியிட்டு இழைத்திடு கோபுரத்தின்வழியாய்ப் படர்ந்து ஓடி வந்து இங்குஆரும் அமுதத் துளி தழைத்த மொழி அன்னையோடுஅம்புலீ ஆடவாவே!அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடுஅம்புலீ ஆடவாவே!