பாடல் 61 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 61 · வருகைப் பருவம்
தேனே வருக! சீராசைத்திருவே வருக! திரிநேத்திரசிவசங்கரருக்கு உவகை நல்கும்செல்வக் கனியே வருக! விண்ணின்ஆனே பரவத் தவம் புரியும்அமுதே வருக! குமுதவாய்அனமே வருக! வினை இருளைஅவிக்கும் கிரணக் கதிர் வருக!பால்நேர் மொழிப் பார்வதி வருக!பனி மாமலையின் சேய் வருக!பன்னாகங்கள் இரண்டும் வழிபாடுபுரியும் புன்னை வனமானே வருக! உயிர் அனைத்தும்வளர்க்கும் அனையே வருகவே!மன்றல் கமழு மலர்க் குழல்கோமதியே வருக! வருகவே!