பாடல் 63 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 63 · அம்புலிப் பருவம்

முன்னம் மலையத்துவச மன்னவன் ஒருமகவுபெற்றிடு முயற்சியாகமுதுமறை விதித்தபடி புரி புத்திர காமேட்டிதன்னின் முலை மூன்று காட்டிக்கன்னி இவள் கனலின் இடை வந்து அவதரித்தனள்கனற் கடவுள் மகவதாகக்கதிர்மதிக் கடவுளே நீயும் உற்பத்தியாம்காரணத் தொடர்பினாலேஉன்னை ஒரு துணை எனக் கொண்டு விளையாட வாஎன்று உவகையோடு அழைத்தால்உனக்கு இது கிடைத்திடும் பேறு அல்ல நீ செய்தஒண்தவப் பேறு அதாகும்அன்னையாய் எவ்வுயிரையும் காக்கும் வல்லியோடுஅம்புலீ ஆடவாவே!அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடுஅம்புலீ ஆடவாவே!
பகிர்