பாடல் 59 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 59 · வருகைப் பருவம்
பருவப் புயல் நேர் குழல் மடவார்படை மா வன்னி பசுந்தென்றல்பன்மா மணித் தேர் கொண்டு இந்தப்பல்லாயிர அண்டத்தின் உள்ளோர்வெருவப் பொரு பூங்கணை மதனைவிழி அங்கியினால் வெறுத்த நம்பர்மேல் ஆசையினால் தவ வேடம்இட்டு விண்ணோர் நகர் பரவும்உருவக் காஞ்சி நகர்க் கம்பைக்குள்நீ பூசை இயற்றிய நாள்உள்ள விரகம் ஆற்றாமல்ஓல நீரால் அச்சுறுத்திமருவச் செய்யு மாமாயவடிவே! வருக வருகவே!மன்றல் கமழு மலர்க் குழல்கோமதியே! வருக வருகவே!