பாடல் 58 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 58 · வருகைப் பருவம்

திதிக்கும் அதிதிக்கும் மகவாம்அசுரர் சுரரும் செங்கையினால்திண் மந்திரத்தின் மதித் தறியில்தீவாய் பாந்தள் சேர்த்து ஈர்த்துமதிக்கும் திருப்பாற்கடல் அமுதைவடித்துத் தெளித்த மதுர ரசவண்மைத் தமிழ்நாட்டுக்கு அரசாம்மலையத்துவசன் தரு மகவே!உதிக்கும் கதிரால் வெம்பாலைஉடலக் கருக்கி நீறாக்கிஉண்ணீர் சுவற்றும் கடும் கோடைக்குஆற்றாது உழன்று ஒண்கோட்டில் வருமதிக்கும் குளிர் செய் புன்னை வனமணியே! வருக வருகவே!மன்றல் கமழு மலர்க் குழல்பக்கம் கோமதியே! வருக வருகவே!
பகிர்