பாடல் 53 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 53 · வருகைப் பருவம்

நெஞ்சில் நுண் அறிவிலா ஒரு முனிவரன் சிவனைநேசித்து நினை வழிபடாநெட்டூரன் ஆனதை அறிந்து நீ தவசினால்நிருமலன் ஓர் பாகம் எய்தவஞ்ச மிகு சஞ்சரீகத்து உரு எடுத்துவலப்பாகத்தையே துளைத்துவலம் வரல் அறிந்து நம் சத்தி அம்சத்தை நீமாற்றுவாய் என அகற்றப்பஞ்சவானனன் ஒருபதங் கூட நல்கி நம்பன்னிதன் சத்தி அன்றிப்பகர் செயல் நமக்கு ஒன்றும் இலை என அறிந்துஉனைப்பரவ அருள் செய்த பரையே!அஞ்சம் நிகர் நடைதரும் கஞ்சமலர்அடி வருந்தாமல் மெல்மெல வருகவே!அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்அன்னை கோமதி வருகவே!
பகிர்