பாடல் 52 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 52 · வருகைப் பருவம்

பணிலம் மூன்றுக்கும் மேலாம் பணிலமும் பரியதண்டும் வாளும் திகிரியும்பத்மாசனத்தில் வளர் திருமகள் நுதற்கு நிகர்பகர்கின்ற தனுவும் ஏந்திமணி ஒளியினால் அந்தகாரத்தை வீட்டுவன்மாசுண உடற்புறத்தின்மரகதக்கிரி எனக் கமலலோசனம் வளர்கின்றமால் புதல்வன் அறியாத்தணியல் செறி கொன்றையும் தண்பிறையும்அரவமும் தாழ நீ சடை விரித்துத்தள்ளாடி உள்ளம் கசிந்து உருகி ஊடல்தவிர் என்று சங்கரர் வணங்கஅணி முடிக்கு அணி எனக் கொண்ட திருவடி பெயர்த்துஅருள் புரிந்திட வருகவே!அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்அம்மை கோமதி வருகவே!
பகிர்