பாடல் 47 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 47 · முத்தப் பருவம்
நிம்பச் செழுந்தார் தரித்த உக்கிர வழுதிநின் சாபம் உற்ற புலையன்நிலையினன் மணிக்கிரீபன் நீயும் நின் கணவனும்நெடுஞ்சினை தழைத்த புன்னைபம்புற்ற வனம் உறைதல் கண்டு உரைத்திட வந்துபார்த்து உள மகிழ்ந்து போற்றிப்பகர் அரிய பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்து பலமணி கொண்டு இழைத்த நீடுதம்பத்தின் மேல் தமனியத்தால் சமைத்தஉத்திரம் ஏற்றி முகடு வேய்ந்துசதுரமிட்டு ஆவரணமும் செய்து சதுமுகத்தவன்வியந்திட அமைத்தசெம்பொற் பெருங்கோயில் வளரும் ஆவுடை அம்மைசெவ்வாயின் முத்தம் அருளே!சேம நிதியாய் அடியர் காமியம் அளித்த சிவைசெவ்வாயின் முத்தம் அருளே!