சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 46 · முத்தப் பருவம்
கைத்த கடலில் பிறந்து விலைகருதாது இருக்கும் கவின் துவரே!காலைக் கதிர் கண்டு அலராமல்தானே அலர்ந்து கமழ்பூவே!செய்த்தலையின் நீர் விரும்பாதுதிகழ் பாகு ஊறும் செழுங்கரும்பே!சேயாய்க் காகம் வளர்க்காமல்தானே வளர்ந்த செவிக்குயிலே!மைத்த மேகத்தில் கூடிவானில் சுழலா வள மின்னே !வண்டும் தேனும் இசைபாடிமகரந்தங்கள் இறைக்க மணம்மொய்த்த மலர்ப் பூங்குழல் ராசைமுத்தே! முத்தம் தருகவே!மூல முதல் ஆறு ஆதாரமுதலே! முத்தம் தருகவே!