பாடல் 41 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 41 · சப்பாணிப் பருவம்
எட்டு வரைக் குல(ம்) நான்கு புறத்தினும்இட்ட சுவர்த் தலமாம்எழு முகிற் குலம் ஏந்து மணிச் சிகரத்துஎழிலாய் உலவக்கட்டு கொடித் தொகை ஆடுபொன் மாளிகைகாமுறு பொன்மலையாய்க்காதன் மிகுத்திடு மாதர்கள் உம்பர்கள்காவுறை கன்னியராய்ப்பட்ட நுதற் கரியாய் பரி செல் தெருபாடுறு நாற்றிசையாய்ப்பாணர்கள் பாடிய யாழிசை வார்விசிபம்பிய பற்பலவாய்க்கொட்டும் இயத்தொனி நீடிய ராசையள்கொட்டுக சப்பாணிகோமதி அம்பிகை புன்னைவனக் குயில்கொட்டுக சப்பாணி