பாடல் 43 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 43 · முத்தப் பருவம்

பிடியாய் அனமாய்ச் செலு(ம்) நடையும்பெருமா மத வெங்கயத் துதிக்கைபிறைபோல் வளையச் செயும் துடையும்பிறங்கு நவ நன்மணி இழைத்துத்துடிபோல் இடையைச் சூழ் கலையும்துளிர் ஆலிலை போல் சுடர் வயிறும்சோமன் இரவி குளிர் வெம்மைதோற்றுந் துணை மேருக் குயமும்வடி ஏர் மதிய நிகர் முகமும் மலர்வாசனைக்கும் இயற்கை மணம்வகுத்த குழலும் கண்டு கண்டு மகிழ்ந்துமதுப் பூங்கொன்றை அணிமுடியார் ஆசை புரி ராசை முத்தேமுத்தம் தருகவே!மூல முதல் ஆறு ஆதார முதலேமுத்தம் தருகவே!
பகிர்