பாடல் 83 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 83 · நீராடற் பருவம்

பாசி கயல் வள்ளை செவ்வாம்பல் செங்கிடைபதும முகை ஞெண்டு பாய்வரால் உள்பற்றுற உறுப்பு அடக்கிய கமடமும்பவள வண்கிளையும் அரி பரந்துமூசு குழல் கண் காது வாய் அதரம்முத்து அணி தனம் முழந்தாள் கணைக்கால்மொய்ம்புறும் புறவடி செவ்விரல் அன்ன வென்றுமுதிர் கவிவாணர் சொன்ன தன்மைஏசில் அது நம்மிடத்து உண்டோ எனச் சூழஇகுளையர்கள் சிவிறி நிறையவிட்ட குங்கும நீர் இறைக்க இருகரையு(ம்)மற்றும் நவமணி கொழித்து எறியு(ம்) உம்பர்ஆசில் அமுதப் பெருக்கு என்ன வரு பொருநை நீர்அம்மை நீ ஆடி அருளே!ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவிஅம்மை நீராடி அருளே!
பகிர்