பாடல் 97 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 97 · ஊசற் பருவம்

வள்ளம் நிறை பாலமுது வெள்ளனம் கிள்ளைகட்குஊட்டி மடமொழி பயிற்றும்மயில் அன மடந்தையர்கள் உபரிகையில்மீதுலவி வாதாயனத்து அருகினில்வெள் ஒளி பரப்பிவரு பிள்ளையம் பிறையைமிளிர் மென்கரத்தால் எடுத்துவில் நுதலை ஒப்பு என்றும் நடுவில் களங்கம்விரை கமழ் நான திலகம் என்றும்எள்ளரிய கவிவாணர் உவமித்தல் சரி விண்ணில்ஏகு என விடுத்து மகிழும்இன மணி இழைத்த மாளிகையும் உபவனமீதுஇருந்து நறை உண்டு பாடும்புள் ஒலியும் மருவு பூகயிலாய நாயகீபொன்னூசல் ஆடி அருளேபொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மைபொன்னூசல் ஆடி அருளே!
பகிர்