பாடல் 99 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 99 · ஊசற் பருவம்

வாதிட்ட சமணர்களை வையை நதி நீரிலும்வன்னியிலும் எழுதியிட்டவண்தமிழ்த் தேவாரமான கவியால் வெல்லமாமணி இழைத்த கிண்ணம்மீதிட்ட பொற்றனத்து அமுது அருந்திக்கௌணியக் குலத்தினில் உதித்தமெய்ஞ்ஞான சம்பந்தரைக் குகனை வேழமுகனைப்போல் வளர்த்த மின்னே!ஏதிட்டமான பொருள் என்று பழவடியருக்குஎண்ணுமுன் அளிக்கும் நிமலீ!இகபரத்தாசையை இகந்த பொதியத்தவன்எழுந்தமதி தோறும் வந்துபோது இட்டு அருச்சனை செய் வரராசை அன்னை நீபொன்னூசல் ஆடி அருளே!பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மைபொன்னூசல் ஆடி அருளே!
பகிர்