சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 95 · ஊசற் பருவம்
நினது செந்தாமரைத் தாள் இணை நிகர்த்தமாணிக்க நிரையாய்க் குயிற்றிநீள் ஒளி பரப்பு பலகையின் மீது உன்நகை ஒத்த நித்திய வடம் புனைந்துகனக வரை வில்லர் புயம் அனைய பவளம்தாணு நாட்டி நின் காயம் ஒத்தகதிர் மரகதத்தினின் இழைத்த உத்திரமிசைக் கட்டி நின்மயமதாகவனையும் இவ்வூசல் மதி மண்டலந் தொட்டாடமகிழ்நர் உளம் ஊசலாடமற்றுள சராசரத்து உயிர்களும் உவந்தாடமாட முடிமேல் விண் மணியைப்புனையும் வரராசை வரை ராசன் அருள் தேவி நீபொன்னூசல் ஆடி அருளே!பொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மைபொன்னூசல் ஆடி அருளே!